தமிழக பகுதியில் நுழைந்த அரிசி கொம்பன் யானை வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்தில் தென்ன தோப்பில் முகாமிட்டுள்ள கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளா மாநிலம் மூணாறு அருகே சின்ன கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் அரிசி கொம்பன் என்னும் 35 வயது ஆண் காட்டு யானை எட்டு பேரை பழிவாங்கியதுடன் வீடு கடைகள் என ஏராளமான கட்டிடங்களை சேதப்படுத்தியுள்ளது.
அரிசி கொம்பன்:
அரிசி கொம்பன் யானை அரிசியை விரும்பி சாப்பிட்டதால் வீடுகளையும் ரேஷன் கடைகளையும் குறிவைத்து அடித்து நொறுக்கி வந்தது. அந்த காட்டு யானையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானதால் அரிசி கொம்பன் யானையை பிடித்து வேறு பகுதிக்கு மாற்ற அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
போராட்டத்தினை தொடர்ந்து கேரளா வளத்துறையினர் சின்ன கானல் சிமெண்ட் பாலம் பகுதியில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தப்பட்டு 4 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்டடது.
சின்ன கானல் பகுதியில் மாலை நேரத்தில் பிடிக்கப்பட்ட அரிசி கொம்பன் யானை இரவு லாரியில் ஏற்றப்பட்டு குமுளி அருகே உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் தமிழக கேரளா எல்லைப்பகுதியில் மங்கல தேவி கண்ணகி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
யானை விடுவிப்பதற்கு முன்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது, மேலும் யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ்., ரேடியா காலர் பொருத்தப்பட்டது. யானைக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்துகள் தடவப்பட்டும், மயக்கநிலை மாறுவதற்கு மாற்று ஊசி செலுத்ப்பட்டு அரிசி கெம்பன் விடுவிக்கப்பட்டது.
யானையின் கழுத்தில் பெருத்தப்பட்டப்பட்டுள்ள ஜி.பி .எஸ்., ரேடியோ காலர் கருவி மூலம் யானையின் நடமாட்டத்தை கேரளா வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
தமிழக எல்லையில் பதற்றம்:
தமிழக எல்லை ஒட்டிய வனப்பகுதியில் அரிசி கொம்பன் யானை விடப்பட்ட நான்கு நாட்களில் தமிழக வனப்பகுதியான மேகமலை வனப்பகுதியில் மக்கள் வசிக்கக்கூடிய மணலாறு டீ எஸ்டேட் பகுதியில் நுழைந்தது.
சுமார் 10 மேற்பட்ட நாட்கள் மணலாறு, மேகமலை, ஹைவேவிஸ் போன்ற பகுதிகளில் சுற்றி திரிந்தது. இரவு நேரங்களில் வாகனங்களை வழி மறிப்பதும், மக்களின் வீடுகளிலும், ரேசன்கடைகளிலும் அரிசியினை தேடி வீடுகளையும், கடைகளையும் சேதப்படுத்துவதிலும் ஈடுப்பட்டது.
ஆட்கொல்லி அரிசி கொம்பன் யானையால் பீதியில் உரைந்த மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலையில் தவித்து வந்தனர். அரிசி கொம்பன் யானையை தமிழக வனத்துறையினர் 24 மணி நேர கண்கானித்து வந்தனர்.
இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு அரிசி கொம்பன் யானை தமிழக வனப்பகுதியை விட்டு மீண்டும் கேரளா வனப்பதியான பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் நுழைந்தது.
பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதியில் சுற்றித்திரிந்து யானை உணவிற்காக நேற்று நள்ளிரவு பெரியாறு புலிகள் சரணாலயத்தை ஒட்டிய குமுளி நகரில் ரோசாப்பூ கண்டம் பகுதியில் நுழைந்தது.
ஜீபிஎஸ், ரோடிய அலைகள் மூலம் அறிந்த கேரள வனத்துறையினர் மக்கள் குடியிருப்பு பகுதியினை அரிசி கொம்பன் யானை நெருங்குவதை தொடர்ந்து கேரள வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று யானையை விரட்டும் பணிகள் ஈடுபட்டனர்.
வனத்துறையுடன் பொதுமக்களும் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து யானையை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலயத்திற்குள் விரட்டி அடித்தனர்.
நள்ளிரவு நேரத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் அரிசி கொம்பன் யானை நுழைந்தது குமுளி நகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை நேற்று நள்ளிரவு கேரள மாநிலம் குமுளி ரோசாப்பூ கண்டத்தில் நுழைய முற்பட்தை கேரள வனத்துறையின் பொதுமக்களும் பட்டாசு வெடித்து பெரியாறு புலிகள் சரணலாய பகுதிக்கு மீண்டும் விரட்டி அடித்த பின்னர்.
கிராம மக்கள் அச்சம்:
தற்போது அரிசி கொம்பன் யானை இன்று பிற்பகல் கம்பம் குமுளி மலை சாலை வழியாக கடந்து தமிழக பகுதியான லோயர் பகுதி வனப்பகுதிக்குள் நுழைந்து உள்ளது.
லோயர் கேம்ப் தேக்கங்காடு வழியாக பெரியார் மின் உற்பத்தி நிலையம் பகுதிக்கு சென்று வனப்பகுதி வழியாக விவசாய நிலங்களுக்கு புகுந்துள்ளது
லோயர் கேம் வைரவனார் வாய்க்கால் பகுதியில் உள்ள தென்ன தோப்பில் முகமிட்டுள்ளது. தகவல் கிடைத்ததை தொடர்ந்து தமிழக வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்
யானை குமுளி மலைச் சாலையில் இருந்தபோது குமுளி சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு. கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் கம்பமெட்டு சாலை வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
Discussion about this post