நேதாஜியின் பெயரை நீக்கிய வேலூர் விளையாட்டு அரங்கம்..!!
வேலூர் மாவட்டம், வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.
பின்னர் தியாகிகளின் வாரிசுகளை கௌரவித்தார், அரசின் சார்பில் ரூ.98 லட்சம் மதிப்பில்பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பதக்கங்களும் சான்றுகளும் வழங்கப்பட்டன பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது இதில்திரளானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக வேலூர் கோட்டையின் மேல் உள்ள கொடி மரத்தில் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் சுதந்திரத்திற்கு வித்திட்ட கோட்டையில் தான் முதன் முதலில் சிப்பாய் புரட்சி நடந்தது அந்த இடத்தில் ஆட்சியர் கொடி ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நாட்டின் விடுதலைக்காக தனி ராணுவத்தையே அமைத்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் பெயர் வேலூர் விளையாட்டரங்கிற்கு வைக்கப்பட்டு நேதாஜி விளையாட்டரங்கு என அழைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேதாஜியின் பெயரை நீக்கி ஆயுத படை மைதானம் என பெயரை மாற்றியுள்ளது சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் நேதாஜியின் பெயரை இந்த விளையாட்டரங்கிற்கு வைக்க வேண்டுமெனவும் தன்னிச்சையாக இந்த செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..