வாக்கு அரசியலுக்காக மக்களிடையே வெறுப்பை விதைக்கும் பாஜகவின் பிரிவினைவாத அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நாடு தழுவிய அளவில் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான உத்திகளை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், பாஜக அரசு பல லட்சம் கோடி ரூபாய் அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது என்றும் அதானி ஊழல் குறித்து கேள்வி எழுப்பிய போது பிரதமர் மோடி வாய் திறக்காமல் மௌனம் காத்ததை இந்த தேசமே கவனித்தது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் வாக்கு அரசியலுக்காக மக்களிடையே வெறுப்பை விதைக்கும் பாஜகவின் பிரிவினைவாத அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நாடு தழுவிய அளவில் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான உத்திகளை உடனடியாக வகுக்க வேண்டும் என்று விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்