பொள்ளாச்சியில் தினமலர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
பொள்ளாச்சியில் தினமலர் நாளிதழ் அலுவலகத்தை முற்றுகையிட்டு தினமலர் நாளிதழை தீயிட்டு கொளுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
பொள்ளாச்சியில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை இழிவு படுத்தும் விதமாக தினமலர் நாளிதழ் தலைப்புச் செய்தியில் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பிய வழியுது என்று காலை சிற்றுண்டி திட்டத்தை இருக்கிறது என இழிவுபடுத்தும் விதமாக கொச்சியான வார்த்தைகளை பயன்படுத்திய தினமலர் நாளிதழை கண்டிக்கும் விதமாக ஊர்வலமாக வந்த பொள்ளாச்சி நகர திமுகவினர் பொள்ளாச்சிதினமலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் தினமலர் நாளிதழ் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தினமலர் நாளிதழை தீயிட்டுக் கொளுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் சமூகநீதி கண்ணோட்டத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனிய வன்மத்தோடு இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ள தினமலர் நாளிதழை கண்டிப்பதாக பேசினார் .
தொடர்ந்து தமிழர்களையும் தமிழகத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக செய்திகளை தினமலர் நாளிதழ் வெளியிடுமானால் திமுக தலைமையின் ஒப்புதலை பெற்று தினமலர் நாளிதழை வெளி வராத சூழ்நிலையை திமுக தொண்டர்கள் உருவாக்குவோம் என தினமலர் நாளிதழுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Discussion about this post