இந்தியாவின் நம்.1 செஸ் வீரரான குகேஷ் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக இடம் பிடித்துள்ளார். கடந்த மாதம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் 17 வயதான குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்து விஸ்வநாதன் ஆனந்தை (2754 புள்ளி) முந்தினார். இதன் மூலம் இந்திய அளவில் குகேஷ் நம்.1 வீரரானார். இந்நிலையில் 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்.1 வீரராக இருந்து வந்த விஸ்வநாத் ஆனந்தை முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குகேஷூக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். மேலும் செஸ் வீரர் குகேஷூக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
இதையும் படிக்க : சாதியைக் காரணம் காட்டி சமையல் செய்ய தடை… கனிமொழியே நேரில் சென்று ஊக்கமளித்த நெகிழ்ச்சி சம்பவம்..!
Discussion about this post