“வயநாடு நிலச்சரிவு.. உதவிகரம் நீட்டிய சூர்யா..”
கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த 29தேதி தொடரந்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமணையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன.
இன்னும் இதில் சிக்கி கொண்டவர்களின் நிலை என்வென்று தெரியாத நிலையில் பலர் மண்ணோடு மண்ணாக புதைந்திருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் மூன்றாவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதை தொடர்ந்து 1000க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து, நடிகர் விக்ரம் முதல் ஆளாக முன்வந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார்.
அவரை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கியுள்ளனர்.
-பவானி கார்த்திக்