சிரஞ்சிவி தலைமையில் நடந்த, வருண்தேஜ் லாவண்யா நிச்சயதார்த்தம்..
தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகரில் வருண்தேஜும் ஒருவர். வருண்தேஜ் நடிகர் சிரஞ்சிவியின் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும். சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் மற்றும் மாயவன் படத்தில் ஜோடியாக, நடித்தவர் தான் நடிகை லாவண்யா.
பிரபல தெலுங்கு நடிகரான வருண்தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி, மிஸ்டர் மற்றும் அந்தாரிக்ஷம் என்று தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.
இதில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பில் இருவரும் ஒன்றாக பழகி வருவது, இருவரின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக பழகி வந்தனர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.
இவர்களின் காதல் பற்றி இருவீட்டிலும் தெரிவித்தனர். உடனடியாக இவர்களின் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்த உறவினர்கள், அடுத்த மாதம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த உறவினர்கள். நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணத்தை நடத்தி வைத்தனர்..
இந்த நிச்சயதார்தத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜுன் மற்றும் ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விரைவில் திருமண புகைப்படங்களும் வெளியிடப்படும் என தெலுங்கு பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post