ஜீ தமிழ் சரிகமபவின் 5வது போட்டியாளர் யார் தெரியுமா..?
ஜீதமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சரிகமப, தற்போது சீசன் 3 விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய், பிரகாஷ் மற்றும் ரம்யா நம்பீசன் நடுவர்களாக தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 23 போட்டியாளர்களுடன் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் விதவிதமான சுற்றுகளுடன் நடந்து வருகின்றது.
23 பேருடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது அக்ஷ்யா, ஜீவன், புருஷோத்தமன், லக்ஷ்னா ஆகியோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர். மீதமுள்ள போட்டியாளர்களில் மேலும் இருவர் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது என நடுவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த வாரம் பெரும் சவாலான வாரம் என்பதால்.., மிகவும் கடினமான பாடல்களை தேர்வு செய்து போட்டியாளர்கள் பாட இருக்கிறார்கள். இன்று நடக்க இருக்கும் ரவுண்டில் தான் அந்த ஐந்தாவது போட்டியாளர் யார் என்பது அறிவிக்கப்படும் .
அதுமட்டுமின்றி ஜூன் 18ம் தேதி மாலை 6மணிக்கு தொடர்ந்து 5 மணி நேரம் கிராண்ட் பினாலி நடைபெறும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மக்களின் அதிக அன்பையும், ஆதரவையும் பெற்றிருக்கும் நாகார்ஜுனா, அடுத்த கட்டத்திற்கு செல்வாரா மாட்டாரா என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.