வருமுன் காப்போம் திட்டம்.. மருத்துவ முகாமை துவக்கி வைத்த ஆட்சியர்…!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் எலவம்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறிந்து ரத்தத்தில் கொழுப்பின் அளவு, இருதய நோய் கண்டறிதல் மற்றும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் பரிசோதனை,கர்ப்பிணி பெண்களுக்கு முழு பேரு கால பரிசோதனைகளும் வழங்கப்பட்டது.
மேலும், கர்பினி பெண்களுக்கு மருந்து பெட்டகம் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம்,உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில்திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி வட்டார மருத்துவ அலுவலர் தீபா மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் குணசேகரன்,மற்றும் கட்சி நிருவாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-பவானி கார்த்திக்