ரேஷன் அரிசியை கடத்திய நபர்.. கைது செய்த போலீஸ்..
திருப்பத்தூர்மாவட்டம், ஆம்பூர் உடைய ராஜாபாளையத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 13 டன் ரேசன் அரிசியை லாரியில் கடத்திய நபரை லாரியுடன் பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தது.
இன்று சென்னை – பெங்களூர் என்.எச்.-48 மாதனூர் உடையராஜபாளையம் அருகே கோபி ஷூ கம்பெனி எதிரே குடியாத்தம் பகுதியை சேர்ந்த கணேசன்.
இவருக்கு சொந்தமான பதிவு எண் கொண்ட லாரியில் 13 டன் ரேஷன் அரிசியை அதன் ஓட்டுநர் பிரதீப்குமார் (43 ) குடியாத்தம் என்பவர் கொண்டு சென்றனர்.
அப்போது ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் மேற்படி லாரி மற்றும் ஓட்டுநரை கைது செய்து வாணியம்பாடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
-பவானி கார்த்திக்