பொங்கலை முன்னிட்டு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாகவுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் படங்கள் தியேட்டரில் போட்டியிட இருக்கின்றனர். ஏற்கவே இரு படங்களுக்கும் தியேட்டர் பிரிக்கும் நடைமுறைகளில் சிக்கல் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில் தெலுகு சினிமாவின் தயாரிப்பாளர் சங்கம் புதிய முடிவை எடுத்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் வேளையில் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகையால் அந்த பண்டிகை நாட்களில் தெலுகு மொழி படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தெலுகு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
மகர சங்கராந்தி பண்டிகையை ஒட்டி தெலுகு படங்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள வால்டர் வீரய்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்மா ரெட்டி உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவுள்ளன, இதனால் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை மீறி கிடைத்தாலும் சொர்ப்ப அளவிலான தியேட்டர்களே ஒதுக்கபடும் என்று தெரிகிறது.
கடந்த வாரம் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது இதை தொடர்ந்து துணிவு படத்தின் முதல் பாடலின் பெயர் சில்லா சில்லா என்று வைக்கப்பட்டுள்ளது மேலும் இப்பாடலை அனிருத் பாட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.