வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் மாநிலம் முழுவதும் கன மழை கொட்டிதீர்த்து வருகிறது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில், மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி பகுதிகளில் அதிக கனமழை பெய்துள்ளன. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத வகையில் மழை பொழிவு இருந்துள்ளது இதனால் சீர்காழி முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கனமழையால் பாதிக்கபட்ட இடங்களை இன்று முதல்வர் ஆய்வு செய்தார்.
கடலூரில் ஆய்வு செய்த முதல்வர் அதன்பிறகு மயிலாடுதுறைக்கு சென்று மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்தார் அதைத்தொடர்ந்து சீர்காழி சென்ற முதல்வர் அங்கே இருக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மீட்புப்பணிகளை குறித்து பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது எதிர்க்கட்சிகள் கூறும் விமர்சனங்களை பற்றி கவலை இல்லை அரசின் செயற்பாட்டில் மக்கள் திருப்தியாக உள்ளனர். அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மக்களின் குறைகளும் விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.