தமிழ் சினிமாவில் திடீரென அனைவராலும் ரசிக்கும் படியான படங்கள் வரும் அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்க்க தமிழக முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்கள் சென்றுள்ளபோது ஏற்பட்ட சுவாரஸ்ய தகவலை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த உதய நிதி ஸ்டாலின் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். லவ் டுடே திரைப்படம் தற்போதய இளைஞர்களின் காதலை மையப்படுத்தி எடுக்கபட்டுள்ளது, காமெடியை மையமாக கொண்டு முக்கியமான கருத்தை இப்படத்தின் வாயிலாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். இதற்கு முன் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கி அதிலும் மிக பெரிய வெற்றியை பெற்றார். இந்நிலையில் முதல்வரின் குடும்பம் இந்த படத்தை காண சென்றுள்ளதாக தெரிகிறது.
அந்த அனுபவத்தை குறித்து உதயநிதி கூறுகையில், நான் என்னுடைய அம்மா மற்றும் அப்பாவுடன் லவ் டுடே படத்தை பார்த்தேன் அப்போது படம் முடிந்த பிறகு வெளிய வரும் வழியில் என்னுடைய அம்மா துர்கா ஸ்டாலின், நாமும் படத்தில் வருவதை போன்று செல்போனை மாற்றிக்கொள்ளுவோமா என்று கேட்டார் அதற்கு நானும் என் அப்பாவும் வேண்டவே வேண்டாம் என்று தெரிவித்தோம் என்று கலகலப்பாக கூறினார். தற்போது இது குறித்த வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது