நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
சென்னை அடுத்த பட்டாபிராம் ஆயல் சேரி பகுதியில் கடந்த ஜனவரி 19ம் தேதி ரெட்டைமலை மற்றும் மற்றும் ஸ்டாலின் முன்விரோதம் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அரியலூரில் நில ஆவணங்களை நவீன மயமாக்கும் ஒன்றிய அரசின் நக்சா நில அளவை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் அரியலூர் நகராட்சியில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு ஒளிபடம் உருவாக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் , இதில் ஏதேனும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உரிய அலுவலரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கமல் தலைமையிலான காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று விற்பனையில் ஈடுபட்ட சரவணன், சேகர் மற்றும் ரகுமான் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பள்ளிக்கரணை, தாம்பரம்-வேளச்சேரி சாலைகளில் புட் கோர்ட் இயங்கி வருகிறது. அதில், குறிப்பிட்ட 11 கடைகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வரி செலுத்தாததால், மண்டல வருவாய் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதனை கடை உரிமையாளர்கள் உதாசினப்படுத்திய நிலையில் மண்டல வருவாய் துறை அலுவலர்கள் 11 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த பெண் மான் ஒன்று வாஷிங் மிஷின் கடைக்குள் நுழைந்துள்ளது. இதனைக் கண்ட ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், அங்கு வந்த அதிகாரிகள் மானை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதிக்கு எடுத்து சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கடந்த இரண்டு மாதங்களாக ஆடுகள் திருப்படுவதாக அப்பகுதி மக்கள் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கே.வி குப்பம் பகுதியை சேர்ந்த சபரி மற்றும் நிஷா ஆகிய இருவரையும், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம், பாகாயத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று காட்பாடி நோக்கி சென்றுள்ளது. அப்போது மக்கான் சிக்னல் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் சேதமடைந்த நிலையில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று சிறுத்தைகள் சுற்றி வந்துள்ளது. அதில் ஒரு சிறுத்தை விநாயகம் என்பவரது வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த நிலையில் செல்ல பிராணிகளை இழுத்து சென்றுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் வந்த சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..