நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சோமு என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் குற்ற சம்பவங்களை தவிர்க்கும் விதமாக மாநகர காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மாநகர வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பயணிகள் உடமைகளையும் சோதனை செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் :
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கடலில் மீனவர்கள் தட்சிணாமூர்த்தி, மணிபாலன், செல்வம், மோகன் மற்றும் அப்பு ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் கடல் அலையின் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தட்சிணாமூர்த்தி, மணிபாலன் அப்பு ஆகியோர் உயிர் பிழைத்துள்ளனர். செல்வம் மற்றும் மோகன் ஆகியோர் மாயமான நிலையில் மோகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் தற்போது செல்வத்தை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சிப் பகுதியில் உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அரசு மதுபானத்தை கள்ள சந்தைக்கு விற்பனைகாக எடுத்துச் சென்ற ராமு என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..