வந்தே பாரத் ரயிலால் கடுப்பான பயணிகள்..!! பரபரப்பான மதுரை ரயில் நிலையம்..!!
வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு சென்னையை வந்தடையும். அலுவலக வேலையாக செல்லும் தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பகல், இரவு நேரங்களில் அவசர வேலையாக செல்பவர்கள் உட்பட பலருக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. 46 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்.., மக்களுக்கு ஒரு நண்பனாகவும் இருந்துள்ளது..
கடந்த செப்டம்பர் 24ம் தேதி முதல் நெல்லையில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு வந்தேபாரத் இரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வந்தே பாரத் ரயில் மதுரையில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னையை வந்தடையும் இந்த எக்ஸ்பிரஸ் செல்லும் வழித்தடத்தில் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே எந்த ரயிலும் செல்லக்கூடாது என்ற ஒரு விதி இருக்கிறது.
ஆனால், மதுரையில் இருந்து செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தே பாரத் ரயிலுக்காக ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்..,
இதனால் மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 6.40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
இந்த கால மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வந்தே பாரத் ரயிலில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் நடுத்தர, ஏழை மக்கள் பயணிக்க முடியதாத நிலை உள்ளது. இந்த சூழலில் சாதாரண கட்டணம் உள்ள வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றப்பட்டுள்ளது இது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறுவது, ‘‘தெற்கு ரயில்வேயில் இந்த திருத்தமானது ரயில் நேரங்களை மேம்படுத்துவதிலும், எக்ஸ்பிரஸ்களின் வேகத்தில் குறிப்பிட்டத்தக்க மேம்பாட்டிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வைகை எக்ஸ்பிரஸ் மட்மின்றி அனைத்து ரயில்களின் நேரமும் மாற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செங்கோட்டை டூ சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து இரவு 9.55 மணிக்கு பதிலாக இரவு 9.45 மணிக்கு புறப்படும்.
மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும்.
மதுரை டூ கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு புறப்படும்.
மதுரை டூ சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து இரவு 9.35 மணிக்கு பதிலாக இரவு 9.20 மணிக்கு புறப்படும்.
மதுரை டூ விழுப்புரம் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து அதிகாலை 4.05க்கு பதிலாக அதிகாலை 3.35க்கு புறப்படும்.
இந்த புதிய மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..