உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. கடந்த 14 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
போரை நிறுத்துங்கள் புதின்
மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை
வான் விழுங்கும்
பகலை
இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்
ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்
போரை நிறுத்துங்கள் புதின்
என பதிவிட்டுள்ளார்.