திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று(மார்ச்.09) முதல் 250 ரூபாய் மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இங்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு 20 ரூபாய், 100 ரூபாய், 250 ரூபாய் என கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கட்டண முறையில் மாற்றத்தை செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் பக்தர்களின் நலன் கருதி இனி ரூ.20 மற்றும் ரூ.250 தரிசன கட்டணச் சீட்டு இன்று முதல் ரத்து செய்யப்படுவதாகவும், 100 ரூபாய் கட்டணம் மற்றும் பொது தரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கோயிலுக்கும் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் வழியாக சமமாக சென்று வழிபடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.