வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு..!
தமிழகத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு, காரைக்கால் பகுதிகளில் ஆகிய பகுதிகளில் ஒரு வாரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு அதிகம். இந்நிலையில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
செப்டம்பர் 3, 4 ஆம் தேதிகளில் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 5 முதல் 9 ஆம் தேதி தமிழக பகுதியில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது.
செப்டம்பர் 3 முதல் 7 ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிகாற்றானது மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வரும் செப் 3 ஆம் தேதி மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு பகுதியில் சூறாவளிக்காற்றானது மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது.
செப் 4 ஆம் தேதி தெற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்பு உள்ளது.
செப் 5, 6 ஆம் தேதிகளில் மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளியானது மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது.
செப் 7 ஆம் தேதி தென்கிழக்கு, மத்தியக்கிழக்கு ஆகிய பகுதிகளில் 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றானது வீச வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்து உள்ளது.