நடிகர் சிங்கமுத்துவிற்கு எதிராக வடிவேலு தொடர்ந்த வழக்கு..!! நீதிமன்றம் விதித்த உத்தரவு..!!
பிரபல காமெடி நடிகர் வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர் சிங்கமுத்து மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து இருப்பது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆறு., அருள், திமிரு, மற்றும் இம்சைஅரசன் 23ம் புலிகேசி. உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகர்களான வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். அவர்களின் அந்த நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது..
இப்படி இருக்க கடந்த 2010ம் ஆண்டு காமெடி நடிகர் சிங்கமுத்து சென்னையை அடுத்துள்ள படப்பையில் தனக்கு சொந்தமான 3.52 ஏக்கர் நிலத்தை வடிவேலுவிடம் 1.93 கோடிக்கு விற்பனை செய்து ஏமாற்றிவிட்டதாக வடிவேலு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இன்னொரு இடத்தை போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் ரூ.12 லட்சத்துக்கு விற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பிறகு நடிகர் வடிவேலுவின் மேலாளர் சிங்கமுத்து மீது காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன் பெயரில் நடிகர் சிங்கமுத்து மே 16, 2010 அன்று திடீரென கைது செய்யப்பட்டு 13 நாள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் அந்த நிலமோசடி வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நீதிமன்றத்தில் இருவரும் சமரசம் செய்து கொண்டதால் அந்த வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது..
தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.., கடந்த சில மாதங்களுக்கு முன் சிங்கமுத்து பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசியதாகவும், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசி தனக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக வடிவேலு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
மேலும் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு சிங்கமுத்து கொடுக்க வேண்டும் என்றும் என கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு நேற்று விசாரணை செய்யப்பட்டது., அப்போது வடிவேலு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்கமுத்து பேசிய வீடியோ ஆதாரம் மற்றும் இதற்கு முன் அவர் பேசிய ஆடியோக்களை நீதிபதியிடம் ஒப்படைத்தார். அதனை அடுத்து நீதிபதி இந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்..
நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் சில முன் விரோதங்களை காரணமாக வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..