தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனர் பாலா அறிவித்துள்ளார். சூர்யாவ மட்டுமின்றி அவரின் தயாரிப்பு நிறுவனமா 2டி என்டேர்டைன்மெண்ட்ஸ் நிருவனமும் விலகுவதாக அறிவித்துள்ளது.
இது குறித்த பாலாவின் அறிவிப்பில், வணங்கான் கதையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சூர்யாவிற்கு உகந்ததாக இருக்குமா என்ற சந்தேகம் வந்ததாலும் ஒரு அண்ணனாக தம்பி சூர்யாவிற்கு சிறு தர்மசங்கடம் கூட நிகழ்ந்து விட கூடாது என்பதாலும் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுகிறார் இதை அவனுடன் கலந்து பேசி ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளோம், வருங்காலத்தில் உறுதியாக இணைவோம் என்று இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.
https://twitter.com/2D_ENTPVTLTD/status/1599435902769836033
இதற்கு பதிலளித்துள்ள சூர்யாவின் 2டி என்டேர்டைன்மெண்ட்ஸ் பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2டி என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனமும் வணங்கான் படத்திலிருந்து இருந்து விலகிக்கொள்கிறோம். என்றும், எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம் என்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெகு நாட்களாக இருந்து வந்த புதிருக்கு வணங்கான் படக்குழு பதிலளித்துள்ளது.
மேலும் இந்த படத்தை வேறு ஒரு கதாநாயகனை வைத்து இயக்கவும் இயக்குனர் பாலா திட்டமிட்டுள்ளார். இதற்குமுன் நந்தா மற்றும் பிதாமகன் படங்களில் ஒன்றாக சூர்யாவை பாலா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.