கால்நடைகளுக்கான தடுப்பூசி முகம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு…!
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் அஞ்சூர் ஊராசியில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கு, கால் மற்றும் வாய் ஆகியவற்றில் நோய் தொற்று ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவங்கி வைத்து ,மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, கொண்டமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கால்நடைகளுக்கான கோசலையை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டமங்கலம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பராமரிப்பதற்கான கோசலை அமைந்துள்ளது.
இங்கு, தாம்பரம் மாமல்லபுரம் சேலையூர் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 72 மாடுகள் பராமரிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 56 மாடுகள் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 2000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது இங்கு 16 மாடுகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றினை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்தாய்வில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவன முறைகள் மருத்துவரால் பராமரிக்கப்படும் முறைகள் குறித்து கேட்டு அறிந்தார்.
மேலும்,கோசாலை சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கவும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப் புற்களை வளர்க்கவும், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டியை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சாந்தி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பொருளாளர் ஜீவானந்தம், ஊராட்சி மன்ற தலைவர் பாலு,வார்டு உறுப்பினர்கள் கணேஷ், ஆறுமுகம், கால்நடை மருத்துவர்கள் சசிகுமார், ஜவஹர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாத்தூர் கிராமத்தில் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை நோய் தடுப்பு திட்டம் ஐந்தாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் மாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கால்நடைகள் அழைத்து வரப்பட்டு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் அன்பரசன் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் திட்ட மேலாளர் மெய்கண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 350-க்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
விவசாயிகள் ஆர்வத்துடன் கால்நடைகளை அழைத்து வந்து கோமாரி தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் பவுண்டேசன் செய்திருந்தது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”