பள்ளி வாகனம் மோதி..இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பலி…!
பாப்பாரப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியான இயேசுராஜா பள்ளி வாகனம், பள்ளி குழந்தகைளை இறக்கிவிட்டு பாப்பாரப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது சஞ்சீவராயபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களின் இரு சக்கர வாகனுமும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் யார் யார் என்பது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மாங்காப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடாஜலம் (27) என்பதும் சஞ்சீவராயபுரம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
விபத்து தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்