இதயத்தை பாதுகாக்க இந்த எண்ணெய்களை பயன்படுத்துங்கள்..!
நம் இதய ஆரோக்கியத்தில் சமையல் எண்ணெய் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். வெப்பமில்லாத தாவர எண்ணெய்களை தேர்ந்தெடுத்து சமைப்பது நல்லது என்பது ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.
ஒரு சில எண்ணெய்களில் திட கொழுப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால் நாம் கொழுப்புகள் குறைந்த எண்ணையை தேர்ந்தெடுத்து சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். தற்போது சந்தைகளில் மலிவான விலைக்கு எண்ணெய்கள் கிடைக்கிறது. ஆனால் அவற்றை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. நாம் தேர்ந்தெடுக்கும் எண்ணையை பொறுத்து உடல்நலம் மற்றும் சமையல் அமையும். அதிகம் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்களைப் பற்றி பார்க்கலாம்.
எள் எண்ணெய் எள் விதையிலிருந்து பெறப்படுகிறது. எள் எண்ணெயில் ஆக்சிஜனேற்றிகள் மற்றும் தாவரக் கலவைகள் அதிகம் உள்ளது. அவை இதை ஆரோக்கியத்திற்கு நல்லது. மூட்டு வலி கை கால் வலி போன்றவற்றை குறைக்கும்.
கடுகு எண்ணெய் கடுகு விதைகளில் இருந்து எடுக்கப்படும். கடுகு எண்ணெய் ஒரு சுவை மற்றும் மனம் காரமான தன்மையும் கொண்டது. கடுகு எண்ணெய் என்பது உணவுகளை வறுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
ஆலிவ் ஆயில் முழு ஆலிவ் பழங்களை அழுத்துவதன் மூலம் ஆலிவ் எண்ணெய் கிடைக்கிறது வயலில் அதிகம் ஆலிவ் ஆயில் சேர்த்து சமைப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு நல்லது. விலை சற்று அதிகமாக இருந்தாலும் ஆலிவ் ஆயில் ஒருநாள் வீதம் அரை கரண்டி பயன்படுத்துவது நல்லது.
அரிசி தவிடு எனப்படும் ரைஸ் பிராண்ட் ஆயில் இது கடினமான வெளிப்புற பழுப்பு அடுக்கில் இருந்து பிரிக்கப்படும். இது ஒரு சாதாரண சுவை கொண்டது. இது அதிக வெப்ப நிலையில் வறுக்கக்கூடிய சமையலுக்கு மிகவும் உகந்தது. அரிசி தவிடு எண்ணெயில் நல்ல கொழுப்புகள் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் ரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்தும். இது இதய நோய் மற்றும் நீரிழிவின் அபாயத்தை குறைக்கும்.
நிலக்கடலை என்பது பெரும்பாலும் நம் வீடுகளில் கடலை எண்ணெய் என்று பயன்படுத்துவது. இது வேர்க்கடலையிலிருந்து பெறப்படுகிறது. வேர்க்கடலை சிறந்த உணவுப் பொருளாகும். இது சிறந்த ஆக்சிஜனேற்றியாகும். இதில் விட்டமின் இ உள்ளது உடலுக்கு மேலும் நன்மை பயக்கும். இதய நோய் அபாயத்தை குறைக்கும்.
* இது போன்ற எண்ணெய்களை நம் உடலுக்கு ஏற்றவாறு தேர்வு செய்து அதனை சமையலுக்கு பயன்படுத்தி வருவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
– நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..