உக்ரைன் – ரஷ்யா தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த வாரம் போலந்து செல்கிறார்.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. இன்றுடன் கடந்த 26 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 25-ம் தேதி போலாந்து நாட்டிற்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது போலாந்து அதிபர் ஆண்ட்ரிச் டூடாவை ஜோ பைடன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் மற்றும் போலாந்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற விவகாரங்களுக்கு மத்தியில் போலாந்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
முன்னதாக, போலாந்து நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தி வருவதும் அந்நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனில் இருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் போலந்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.