அமெரிக்க புலனாய்வு எப்.பி.ஐ இயக்குநராக…!! இந்திய நாயகன் தேர்வு…!!
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் வருகின்ற ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்க உள்ள நிலையில், தனது மந்திரிசபையில் இடம்பெறும் மந்திரிகள் மற்றும் பல்வேறு உயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் பட்டேல் என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்யப் ஒரு சிறந்த வழக்கறிஞர் மற்றும் புலனாய்வு அதிகாரி என்பதால் ஊழலை எதிர்த்திடவும், நீதியை காத்திடவும் மற்றும் அமெரிக்க மக்களை பாதுகாத்திடவும் சரியானவர் காஷ்யப் பட்டேல் தான் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..