வெளியான யுபிஎஸ்சி தேர்தல் முடிவுகள்..!! தமிழகத்தில் முதல் இடம் பிடித்தது..!!
மத்திய அரசின் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளில் பணி செய்யும் நபர்களை தேர்வு செய்வதற்காக மத்திய பணியாளர் ஆணையம் யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்தும்
கடந்த ஆண்டு மே 28ம் தேதி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கான தேர்வுள் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு க்ரூப் ஏ மற்றும் க்ரூப் பி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 4 முதல் 9ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்ட நிலையில் யுபிஎஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியானது. அதில் மொத்தம் 1016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், இந்திய வெளியுறவுப் பணி, மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பணிகளுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தேர்ச்சி பெற்றவர்களில் மொத்தம் 347 பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும்,
இந்த லிஸ்டில் 116 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், ஒபிசி பிரிவில் இருந்து 303 பேரும், எஸ்சி பிரிவில் இருந்து 165 பேரும், எஸ்டி பிரிவில் இருந்து 86 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்பவர் முதல் இடத்தையும், அனிமேஷ் பிரதான் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், டோனூரு அனன்யா ரெட்டி என்பவர் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
யுபிஎஸ்சி-ன் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும். அதன் பின் மேலே இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வு 2023 இறுதி முடிவிற்குள் சென்று இணைப்பை கிளிக் செய்து, உங்கள் ரெஜிஸ்டர் என் கொடுத்து சமீட் செய்தால் உங்களின் ரிசல்ட் தெரியும். அல்லது ( https://upsc.gov.in/exams-related-info/final-result ) இந்த லிங்கை க்ளிக் செய்தாலே போதும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..