பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு சசி தரூர் அறிவுறுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.
Thanks to the @INCTamilNadu workers who gave me such an enthusiastic reception at the airport. Our karyakartas are our greatest strength. #ThinkTomorrowThinkTharoor pic.twitter.com/8PcpelXMWn
— Shashi Tharoor (@ShashiTharoor) October 7, 2022
இதற்காக நாடு முழுவதும் சென்று காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் வந்துள்ள சசி தரூர், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்றார். நான் வெற்றி பெற்றால் கட்சியை வலுப்படுத்துவேன். அடிமட்ட தொண்டர்கள் ஆதரவு எனக்கு அதிகமாக உள்ளது.
Enjoyed a warm welcome at @INCTamilNadu from party colleagues, but no “leaders” present. At the ensuing press conference, media alleged that office-bearers were told to stay away. Interestingly dozens of ordinary citizens attended, to show me their support #ThinkTomorrow pic.twitter.com/rKQjU0vcZy
— Shashi Tharoor (@ShashiTharoor) October 7, 2022
இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன் என்றார்.சசிதரூர் வருகையின் போது பெரிய அளவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வருகை தரவில்லை. தமிழகத்தில் சுமார் 12 நிர்வாகிகள் மட்டுமே சசி தரூருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.