கட்டுக்கடங்காத கூட்டம்.. மாநாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!! தலைவர் விஜய் அறிவிப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் பேர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று மாலை நடக்கவுள்ள நிலையில்., தொண்டர்கள் இன்று காலை 5 மணி முதலே வருகை தந்தவாரு உள்ளனர்.. தற்போது வரை 50,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநாடு திடலில் பங்கேற்றுள்ளனர்..
அந்த மாநாட்டில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.. குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, இருக்கை வசதி, மருத்துவ வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது..
இதற்கிடையில் தவெக தலைவர் விஜய், மாநாட்டில் கர்ப்பிணி பெண்கள் பங்கேற்க கூடாது., குழந்தைகள் அழைத்து வர வேண்டாம்., உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்க வேண்டாம் வீட்டில் இருந்த படியே மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்..
ஆனால் இன்று அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்., வாகனம் நிறுத்தமானது 5 zone ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் 4zone வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது..
இன்னும் தொண்டர்கள் வருகை அதிகரித்து கொண்டே இருப்பதால் வாகனம் நிறுத்ததிற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது., அதேபோல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது..
மாநாடு திடலில் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்து இருப்பதால் மாலை 5மணிக்கு மேல் நடக்க இருந்த மாநாடு 3 மணிக்கே மாநாடு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பிரத்யேக தகவலை அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளதாக., பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..