தவெக மாநாட்டில் 85 தொண்டர்கள் மயக்கம்…!! தொண்டர்கள் வைத்த கோரிக்கை..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் பேர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று மாலை நடக்கவுள்ள நிலையில்., தொண்டர்கள் இன்று காலை 5 மணி முதலே வருகை தந்தவாரு உள்ளனர்.. தற்போது வரை 50,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநாடு திடலில் பங்கேற்றுள்ளனர்..
மாநாட்டில் பங்கேற்றுள்ள தொண்டர்களுக்காக குடிநீர் வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தொண்டர்கள் மயக்கம் அடைந்து வருகின்றனர்..
ஒரு ஆண் காவலர், பெண் காவலர் உட்பட 85க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர் அவர்களுக்காக உடனடி ஆம்புலன்ஸ் சேவை அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
ஆங்காங்கே தண்ணீர் தொட்டி வைக்கப்படிருந்தாலும் தண்ணீர் நிரப்படவில்லை என தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்..
மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீரும் தீர்ந்து விடுகிறது.., கூடுதல் தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் படி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..