ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவதூறு பேச்சு…!! செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்…!!
திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரிடர் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல் – தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதிசமத்துவத்தைக் குறளாகத் தந்த அய்யன் திருவள்ளுவர்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டினைபெருமிதத்துடன் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளனர். இவ்வாறாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,. தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட 1000 பேர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..