“டங்ஸ்டன் சுரங்க வரி..” தீர்மானம் நிறைவேற்றம்..!!
திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் எனும் கனிம வளத்தை சுரங்க நடவடிக்கையின் மூலம் எடுப்பதற்கு கடந்த நவம்பர்-7 அன்று வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் ஏலம் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரக்கூடாது என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொள்கை முடிவை அறிவித்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி டங்ஸ்டன் கனிமத் திட்டத்திற்கு நவம்பர் -23 ஆம் தேதியன்று பல்வேறு கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டதிருத்தம் வந்த போதே கடுமையாக எதிர்த்து மக்களவை, மாநிலங்களவைகளை நடத்த விடாமல் குரல் கொடுத்தும், வெளிநடப்பு செய்தும் தமிழக அரசு எதிர்ப்பை காட்டியது. மேலும் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் பற்றி தகவல் வந்தவுடனேயே திராவிட மாடல் அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
அதன் பின்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்த அதிமுகவும், மாநில உரிமைகளைப் பறிக்கும் அப்படியொருசட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி டங்ஸ்டன் கனிமஏலம் விட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசும் போடும் கபட நாடகத்திற்கு திமுக செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..