நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு..!! முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!
பெஞ்சல் புயல் பாதிப்புக்கு தொடர்பாக எந்த ஒரு நிதியையும் ஒன்றிய அரசு வழங்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு அளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் பருவ மழை காரணமாக மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இருப்பினும் கடந்த டிசம்பர் 2ம் தேதி பெஞ்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் 5ம் நாள் கூட்டதொடர் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் மத்திய அரசு விடுவித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், பெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்காக 6 ஆயிரத்து 675 கோடி நிதிக்கேட்டு, ஒன்றிய அரசிடம் முறையிட்டும் தற்போது வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் ஒன்றிய அரசு நிதி விடுவிக்காத காரணத்தால் மாநில அரசே சொந்த வருவாயை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிவருவதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..