ஒன்றிய நிதிநிலை அறிக்கை..! அதிமுக செயற்குழு கூட்டம்..! கடுப்பான மூத்த நிர்வாகிகள்..!!
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களை அறிவிக்காததை கண்டித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்று ம் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் சசிகலா – ஓபிஎஸ் கூட்டணி குறித்து அதிகம் பேச வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது., மேலும் சில கொங்கு மண்டல சீனியர்கள் இதனை எடுத்துப் பேச இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களை தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர்
அதன் பின்னார் இந்த அவசர செயற்குழுவில் மொத்தம் 11 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. செயற்குழுவில் 9 தீர்மானங்கள் மற்றும் 2 சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களை அறிவிக்காததை கண்டித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும், மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்தக் கோரி அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கட்சியை பலப்படுத்த பிரிந்திருக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், தொடர் தேர்தல் தோல்விகளுக்கு காரணமான மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி இதுபற்றி வாய் திறக்காமல் இருப்பது., நிர்வாகிகள் பேச்சை அவமதிப்பதற்கு சமம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பின் தான் அதிமுக அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்து வருவதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது என்றும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..