எதிர்பார்க்காத பதிலடிகள் காத்திருக்கிறது..! சிறந்த சட்ட வல்லுநர்களை சந்தித்த முதலமைச்சர்..!! அடுத்த முடிவு..?
அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் இருந்து நீக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சர், அவரை பதவியில் வைத்திருக்க கூடாது என்றும் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆலோசனை நடத்தி அமைச்சரவை மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருக்காரர்.
ஆனால் தமிழ்நாடு அரசு செந்தில் பாலாஜியை இலாக்கா மாற்றத்திற்கு காரணம் அவரின் உடல்நிலை மட்டுமே என்று கூறியது.., அமைச்சர் பதவி விலக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சர் அதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் அமைச்சரை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என ஆர்.என்.ரவி அறிவித்தார். ஆளுநருக்கு இதுகுறித்து அதிகாரம் கிடையாது ஒரு அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ.., நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
ஆளுநரின் இந்த நடவடிக்கையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று அறிவித்தார். இந்த நிலையில் 5 மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை ஆளுநர் ரவி செந்தில் பாலாஜி நீக்குவது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என்று அறிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது. இது குறித்து பேசிய அவர் “மத்திய உள்துறை அமைச்சகம்” தான் இதை அறிவுறுத்தியது. இந்த அறிவுரை காரணமாக அமைச்சர் பதவி விலகல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
மேலும் இதுகுறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்க போவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும், செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் நடக்க இருக்கும் கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ரகுபதி பங்கேற்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் மற்றும் என்.ஆர்.இளங்கோ பங்கேற்க இருப்பதாக இந்த விவகாரம் குறித்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் செயல்பட போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.