மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொருளாளர் அன்டோனியா குட்டெரெஸ் பிரதமர் மோடியை இன்று குஜராத்தில் உள்ள கெவாடியில் சந்தித்து பேசினார்.
அதன்பின் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை திட்டத்தைப் பிரதமர் மோடி மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் குட்டெரஸ் சேர்ந்து தொடக்கி வைத்தனர்.இந்த நீண்ட நேர சந்திப்பில் இந்தியாவிற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கன்வுசிலில் நிரந்திர இடம் அளிப்பது குறித்தும், தீவிரவாத,பயங்கரவாத தடுப்புகளை பற்றி உரையாடினார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பு முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வை தொடர்ந்து ஐ.நா.சபை பொருளாளர் அன்டோனியா குட்டெரெஸ் கெவாடி கிராம மக்களிடம் உரையாடுகிறார் அதன்பின்பு வெளியுறவு அமைச்சர் .ஜெய்சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.