டென்ஷனான உதயநிதி..!! முதலமைச்சருக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்..!! அடுத்த மூவ்..?
எடப்பாடி பழனிசாமியுடன் விமானத்தில் பயணித்த அதிகாரியிடம் தேர்தல் குறித்த சில முக்கிய தகவல்கள் பகிரப்பட்டதாக உளவுத்துறை ரிப்போர்ட் சென்றுள்ளதால் அரசியலில் இந்த மாற்றங்கள் நிகழப்போவதாக சில தகவல்கள் வெளியாக்கியுள்ளது..
விமானத்தில் விவாதம் :
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமானநிலையத்தில் இருந்து சேலம் நோக்கி விமானத்தில் பயணித்துள்ளார்.. அந்த பயணித்தில் எடப்பாடி பழனிசாமியுடன் திமுக எம்எல்ஏ பயணித்துள்ளார்.. அவர்களோடு அரசு உயர் அதிகாரி பயணித்ததாக சொல்லப்படுகிறது…
அப்போது, எடப்பாடி பழனிசாமியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உடல்நிலை பற்றி பேசியதோடு வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக நடத்தபோகும் மூவ் குறித்தும் விவாதித்தாக சொல்லப்படுகிறது.. அந்த அரசு உயர் அதிகாரியை முதலமைச்சர் ஸ்டாலின் தான் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடதக்கது…
இந்நிலையில் அந்த அதிகாரி.. எடப்பாடி பழனிசாமியிடம் திமுகவின் செயல்திட்டங்கள் பற்றி பேசியதோடு ஆட்சி மாற்றம் குறித்து பேசியது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் :
அவர்கள் பேசியதை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதனால் டென்ஷனான அவர் உளவுத்துறையை தொடர்பு கொண்டு அதை பற்றி பேசியுள்ளார்.. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டை உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரிடம் பகிர்ந்து உள்ளார். இதனால் கோபமடைந்த முதலமைச்சர் ஸ்டாலின்.. சென்னை வந்த பின் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்..
முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை :
அதனை தொடர்ந்து அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்.., “நான் அமெரிக்காவில் இருந்தாலும் உங்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கட்சியில் நடந்துக்கொண்டிருப்பது என்ன..? கட்சியில் இருந்து பிற கட்சிகளுக்கு வேலை பார்ப்பவர்கள் யார் என எல்லாம் எனக்கு தெரியும்.. எனது முழு கவனமும் தமிழகத்தின் மீதுதான் இருக்கும். அதேபோல, உங்கள் ஒவ்வொருவரையும் மத்திய அரசு கண்காணித்து கொண்டு இருக்கிறது. எனவே எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள் என அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்..
அமைச்சரவையில் மாற்றம் :
அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் இனி அதிகாரிகளின் மாற்றம் சில நாட்களுக்கு இனி இருக்காது. எனவும் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்தில் குறிப்பிட்ட சில அமைச்சர்களை மட்டும் மாற்றம் செய்யபோவதாகவும் அதற்கான லிஸ்ட்டை திமுக தயார் செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாக்கியுள்ளது..
எதிர்பார்ப்பு :
முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்னே அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கும் என பலரும் எதிர்பார்திருந்த நிலையில் அமைச்சர்கள் மாற்றம் செய்யாமல் முதலமைச்சரின் அமெரிக்க பயணத்திற்கு பின் மாற்றாங்கள் ஏற்படுமா என்று பலரும் எதிர்பார்பில் காத்திருக்கின்றனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..