பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் “மாமன்னன்” படத்தை இயக்கி வருகிறார். தீவிர அரசியலில் இறங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் என்பதால் மாமன்னன் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள் வெளியாகி தாறுமாறு வைரலானது. குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அரசியல்வாதி கெட்டப்பில் வடிவேலு இருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.
Discussion about this post