ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்க அரசாணை பிறப்பித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி, கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பு குழு அமைத்தது தொடர்பான கேள்விக்கு,
ஒன்றிய பாஜக அரசு ஆரம்பித்தில் இருந்தே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என வலியுறுத்தி வருகிறார்கள். இதை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என்றும் கூறினார்.
மும்பையில் இந்திய கூட்டணியின் 3வது கூட்டம் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் குழு அமைத்தது தொடர்பான கேள்விக்கு,
அவர்கள் பயத்தில் உள்ளனர் என்றும் என்ன கொள்கை வித்யாசம் இருந்தாலும் பாஜக அரசை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒன்று கூடியுள்ளோம். இந்தியா கூட்டணி காரணமாகவே சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தையும் கூட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.