பிரபல மலையாள நடிகை மரணம்..! அதிர்ச்சியில் திரை உலகம்..!
பிரபல மலையாள சினிமா நடிகை “அபர்ணா” வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தெரிய வராததால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம் கரமனை தளியில் பகுதியைச் சேர்ந்த நடிகை அபர்ணா நாயர் (36). மேக தீர்த்தம், முத்துகவு, அச்சாயன்ஸ், கோடதி சமக்ஷம், பாலன் வக்கீல், கல்கி போன்ற மலையாளப் படங்களிலும், சீரியல் களிலும் நடித்துள்ளார்.
நேற்று இரவு திடீரென வீட்டில் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், காலை வெகு நேரம் ஆகியும் மகள் வெளியே வரவில்லை என இவரின் தாய் அபர்ணாவின் ரூமிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்த்துள்ளனர்.
பின் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் உடலை மீட்டு காவல் துறையில் புகார் அளித்துள்ளனர், புகாரின் பெயரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்று இருப்பதால்.., நாளை தகனத்திற்காக கொண்டு வரப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் வேதனை அளிக்கும் விஷயம் என்னவென்றால் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
Discussion about this post