அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்..!! முதலமைச்சர் சொன்ன வார்த்தை..?
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும், அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், சேகர்பாபு, கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக 259 மாணவ மாணவியருக்கு ரூபாய் 50 லட்சம் அளவிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது,
13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக இதுபோன்ற ஒரு திட்டம் சென்னை மாநகராட்சியில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் நான் மேயராக இருந்த காலகட்டத்தில் துவங்கப்பட்டது. அந்த சமயத்தில் எங்கள் குழந்தைகளுக்கு சானிட்டரி நாப்கின் தருவதற்கு, நீங்கள் யார்..? என்று ஒரு சில தற்குறிகள் கேள்வி கேட்டனர்.
ஆனால் இந்த திட்டம் இன்று, இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்ட வருகிறது. அதற்கு முன்மாதிரியாக விளங்கியது சென்னை மாநகராட்சி தான் என்று கூறினார்.
பின்னர் பேச துவங்கிய அமைச்சர் சேகர் பாபு, உதயநிதியை “மாமன்னன்” என்று அழைத்தார். அதோடு எனக்கு பின்னால் பேச வேண்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் எனக்கு முன்னாலே பேசி விட்டார். அவருக்கும் வணக்கம் என்று நகைச்சுவையாக கூறினார்.
கடந்த ஆட்சி பாவம் நிறைந்த ஆட்சி, இந்த ஆட்சி படிப்பவர்கள் நிறைந்த ஆட்சியாக திகழ்கிறது. 100 ஆண்டுகளுக்கு பயன் தர வேண்டுமானால் கல்வி வழங்க வேண்டும். என்று கூறுவார்கள், அந்த வகையில் சிறப்பான கல்வியை பெற வேண்டும், என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடை பேச்சு:
நான் இந்த நிகழ்ச்சியில் பேசாவிட்டால் நீங்கள் கோபித்துக் கொள்வீர்கள், என்பதால் தான் உடல்நிலை சரியில்லாத போதும் உங்கள் முன்னால் பேசுகிறேன். முதல்வர் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய போது முதல்வருடன் தொலைபேசியில் பேசினேன், இந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியுமா என்று தெரியவில்லை என்று அவரிடத்தில் கூறினேன்.
அதற்கு அவர், இந்நிகழ்ச்சிக்கு சென்று பாராட்டி வாழ்த்து சான்றிதழ் வழங்கிவிட்டு வா என்று கூறினார்.

இன்று வழங்கப்பட்டிருக்கும் தொகை பரிசு தொகை அல்ல இது உங்களுக்கான உரிமைத்தொகை, இலவசம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தக்கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டின் பிராண்ட் அம்பாசிட்டராக முதலமைச்சர் இருக்கிறார்.
தமிழகத்தின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகிறது. முதலமைச்சரை போலவே நீங்களும் இந்த மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிடராக விளங்க வேண்டும். மாணவர்கள் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
அமைச்சர் கே என் நேரு மேடைப்பேச்சு,
நான் அமைச்சராக இருக்கும் நகராட்சி நிர்வாகத் துறைக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், பள்ளி கல்வித்துறைக்கு, மட்டும் 34,000 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த அளவிற்கு பள்ளிக் கல்வித் துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தருகிறது.

சமூகத்தில் இன்று மூத்த வழக்கறிஞர்களாக சிறந்த மருத்துவராக உள்ள பலரும் அரசு பள்ளியில் பயின்றவர்கள் தான். முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது ஒரு லட்சம் மாணவர்கள் சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்ற நிலையில் தற்பொழுது ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருவதாகவும் இதனை இன்னும் அதிகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்து தர உறுதியாக இருக்கிறேன் என்றார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் :
சென்னை பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்று உள்ளது என்றார்
பின்னர் பா ரஞ்சித் பதிவுக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி.
யாராக இருந்தாலும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் அவர் (பா.ரஞ்சித்) ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளார் அதற்கு பதில் அளித்துள்ளேன்.
தவறு எங்கு நடந்தாலும் தவறு தவறுதான்
அந்த தவறை திருத்திக் கொள்ளும் வகையில் தான் தலைவர்கள் எங்களை வளர்ந்திருக்கிறார்
இரண்டு பாக்ஸிங் அகாடமி விரைவில் துவங்க உள்ளோம் அதற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. கோபாலபுரம் பகுதியிலேயே மிகப்பெரிய பாக்சிங் அகாடமி துவங்கப்பட உள்ளது
அடுத்த வருடத்தில் இருந்து முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகளில் பாக்ஸிங் சேர்க்கப்படும் என்று கூறினார்.
Discussion about this post