மதுரையில் தேசிய கண் தான இரு வார விழா..! மாவட்ட ஆட்சியர் சங்கீதா IAS துவக்கம்..!
கண் மருத்துவமனை சார்பாக 38வது தேசிய கண் தான இரு வார விழா மதுரை மாவட்ட ஆட்சியாளர் திருமதி சங்கீதா IAS கண்களை கட்டிக்கொண்டு நடந்து வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
25 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 8 வரை கொண்டாடப்படுகிறது. இதன் முதல் நிகழ்வாக 25.8.23 அன்று பார்வையற்றோர் நடை (blind walk ) நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியாளர் திருமதி சங்கீதா IAS அவர்கள் காலை 7 மணிக்கு தொடங்கி வைத்து சிறிது தூரம் கண்களை கட்டிக் கொண்டு நடந்து வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வானது அண்ணா பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து அரவிந்த் கண் மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவில் முடிவடைந்தது. இதன் நோக்கம் பார்வையற்றோர் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை நாம் அனுபவித்து அதற்குள்ள தீர்வாகிய கண்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, இதில் அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை கண் மருத்துவர் கிம், டாக்டர் கிருஷ்னதாஸ் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஒருங்கினைப்பினை PRO ராமநாதன், கண்வங்கி மேளாளர் சரவணன் செய்திருந்தனர்.
Discussion about this post