சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வருவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
விமான நிலையத்தில் ரூ.2.83 கோடி மதிப்பு உள்ள 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தங்கம் கடத்தி வரப்பட்டது தொடர்பாக 11 இலங்கை பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செயப்பட்டுள்ளது.