தவெக செயற்குழு கூட்டம்..!! 28 தீர்மானங்கள் நடத்தை விதிமுறைகள்..!!
சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று.. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில், பொதுச் செயலாளர் திரு ஆனந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது…
இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
முன்னதாக கொள்கைகளையும் கொள்கைத் தலைவர்களையும் உறுதியாகப் பின் பற்றுவதில் தான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சியும் வேகமும் விவேகமும் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் அதை நன்கு உணர்ந்து, தன் கொள்கைத் தலைவர்களின் வழி நடக்கும் இயக்கம் ஆகும். பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை போன்ற பெரியாரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளை நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக எப்போதும் முன்னெடுக்கும் என உறுதி அளித்தனர்..
CONDUCT RULE’S :
அதனை தொடர்ந்து.. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான ‘நடத்தை விதிமுறைகள்’ (con- duct rules) வகுக்கப்பட்டு நெறிமுறைப்படுத்தப்படும்.
அரசை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வசதிக்காக உயர்நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டது போல. மதுரையில் தலைமைச் செயலகக் கிளை அமைக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..