தவெக தலைவர் விஜயின் பூர்வீக வீடு.. எங்கு உள்ளது தெரியுமா..?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பூர்வீக கிராமமான ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கிராமத்தில் அவர் தாத்தாவின் கல்லறை உள்ளது.
முத்துப்பேட்டை கிராமத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் தந்தையின் கல்லறைத் தோட்டம் உள்ளது. கடற்கரையோர கிராமமாக உள்ள இந்த இந்த முத்துப்பேட்டை கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் சர்ச் உள்ளது.
சர்ச் வளாகத்தில் இருபுறங்களிலும் உள்ள கல்லறை தோட்டங்களில் ஏராளமான கல்லறைகள் உள்ளன. அவற்றில் எஸ்.ஏ. சந்திரசேகரின் தந்தை சேனாதிபதியின் கல்லறை உள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினரான காட்வின் 35, கூறியதாவது, விஜய் பிறந்த கிராமம் முத்துப்பேட்டை. அவரது தாத்தா சேனாதிபதி பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே துறையில் பணிபுரிந்துள்ளார்.
சினிமா மற்றும் கலைத்துறை ஆர்வத்தால் சந்திரசேகர் இளமை காலத்தில் சென்னை சென்றார். அவரது உறவினர்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர்.
1982ல் சேனாதிபதி இறந்த பின் கல்லறையில் வழிபாடு செய்வதற்காக ஆண்டிற்கு இரு முறையாவது வந்து செல்கிறார்.
கடந்த ஜூலை 17ல் இந்த கல்லறை புதியதாக சீரமைக்கப்பட்டது. அச்சமயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் அன்னதானம் அளித்தார். தற்போது விஜயின் பூர்வீக கிராமம் முத்துப்பேட்டை என்பதை அறிந்த ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.
கல்லறையை பார்த்து செல்கின்றனர். விஜய் சிறுவயதில் மட்டுமே கிராமத்திற்கு வந்ததாக அறிகிறோம். முத்துப்பேட்டையில் விஜய் குடும்பத்தினர் வாழ்ந்த பூர்வீக வீடு இருந்த இடம் தற்போது வெற்று நிலமாகத்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சத்யா.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..