ஒரு சாதியை தூக்கி மற்ற சாதியை இகழ்வதா..? நான் செய்தால் குற்றமா..?
இப்போ எல்லாம் பெயர்களும் ஊர்களும் அதிகமாக இருப்பதை விட ஜாதிகள் தான் அதிகமாகி விட்டது.. “முதலியார் தெரு, செட்டியார் தெரு, ஐயர் தெரு, கவுண்டர் தெரு என்று இருக்கிறது. தெருக்களில் மட்டுமா செட்டியார் கடை, பிராமணாள் கஃபே என்று இன்னும் கூட சென்னையில் இருக்கிறது.
ஜாதி பார்த்து திருமணம் செய்த காலம் போயி இப்போ அதே ஜாதியை வைத்து பல திருமண விளம்பரம்.., அதை பார்த்து கொடுக்க ஒரு பிரைவேட் கம்பெனி என பல இருக்கு.. சரி தெருக்கள்., தொழில்கள் தான் இப்படி என பார்த்தால் படத்தில் கூட ஜாதியை வைத்து தான் படமாக எடுகிறார்கள் “சின்ன கவுண்டர், தேவர் மகன், குங்கும பொட்டு கவுண்டர்., பொண்ணா கொக்கா என்றெல்லாம் 80ஸ் மற்றும் 90 களில் வந்த படங்களில் ஜாதியை வைத்து தான் படமாக எடுத்துள்ளார்கள்.. ஆனால் அப்போ அது போன்ற எதிர்ப்புகள் ஏதும் இல்லை ஆனா இப்போ ஒரு படத்தின் அப்டேட் வருவதை விட அதற்கான விமர்சனங்கள் தான் எழுகிறது.. அதுவும் நாங்கள் எடுத்தால் மட்டும் குறை கூறுகிறார்கள் என இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்..
தம்பி உங்க பேச்சில் நிறைய முரன்பாடுகள் உள்ளன. நீங்களும் கூட பறையர் மகன், சின்னப் பறையர், பறையர் பொண்ணா கொக்கா என்றெல்லாம் படம் எடுங்கள் யார் தடுத்தார்கள் ? நீங்களும் கூட பறையர் கடை, பறையர் கஃபே என்று உணவகம் நடத்துங்கள். வருபவர்கள் வரட்டும். பறையர் வீதி என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள். யார் எதிர்த்தார்கள் ?
தேவர் மகன் படத்தில் கூட, இரண்டு தேவர் சமூகத்தினருக்கு இடையே மோதல் என்றுதான் வரும். சின்னக் கவுண்டர் படத்திலும் அந்த கேரக்டரின் தரத்தை உயர்த்தும் காட்சிகள்தான் இடம் பிடித்திருக்கும். மற்றபடி தேவர், கவுண்டர்களை கண்டால் தோளில் உள்ள துண்டை எடுத்து இடுப்பில் கட்டி வணக்கம் செலுத்துவது போன்ற காட்சிகள் கூட அந்த கேரக்ட்ரின் தரத்துக்கான மரியாதையாக தான் எடுத்துக் கொள்ளலாம். மேலும் அன்று இருந்த சூழலை நிதர்சனமாக காட்டுவதாகவே இருந்ததே தவிர, ஒரு சாதியை தூக்கி மற்ற சாதியை இகழ்வதாக இல்லை.
சொல்லப்போனால் பட்டியல் சமூகங்களை இகழ்வது என்பது இந்தியாவில் பெரும் தண்டனைக்குரியது என்பதை அனைவரும் அறிவார்கள். எந்த எதிர் விளைவுகளும் இன்றி இஷ்டம் போல் ஒரு சமூகத்தை கேவலப்படுத்தலாம், காழ்ப்புணர்வை உமிழலாம், அந்த சாதி மீதான பார்வையையே சமூகத்தில் மாற்றி அமைக்க முயற்சி செய்யலாம் என்றால் அது பிராமண சமூகத்தின் மீது மட்டுமே.
உங்களை போன்ற இயக்குனர்கள் இன்னும் கூட நசுக்கினார்கள், பிதுக்கினார்கள் என குறை கூறுவதற்கு பதில், பறையர் சமூகத்தின் குலப்பெருமையை படமெடுக்கலாமே ? உங்களுக்கு வேண்டுமென்றால் அடியேனே நிறைய பறையர் குல வீர வரலாற்றின் சரித்திர பக்கங்களை எடுத்து தருகிறேன். ஆக்கப்பூர்வமாக அதில் ஈடுபடுங்கள்.அதை படமெடுத்து, தமிழர்களின் வீர வரலாற்றில் பறையர்களின் பங்களிப்பை உணர்த்துங்கள்.
அதை விடுத்து வேறு ஒரு சமூகத்தை கேவலப்படுத்த, உண்மைகளுக்கு முரணாக குறியீடு வைத்து படம் எடுப்பது. என்னால் மேலே வர முடியாவிட்டால் உன்னை கீழே இறக்குவேன் எனும் மனநிலையில் செயல்படுவது எல்லாம் தாழ்வு மனப்பான்மையின் தாக்கமே.
உங்களை போன்ற மிகத்திறமை வாய்ந்த இயக்குனர்கள் எல்லாம் சமூகத்தில் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்கள் சமூகத்தின் சரித்திர பழம் பெருமைகளை மீட்டெடுத்து வர வேண்டும். அதை விடுத்து வன்மத்தோடும், காழ்ப்புணர்வோடும் செயல்படுவது உகந்ததல்ல. என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..