அனைத்து நீதிமன்றங்களிலும் இனி…!! டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு..!!
அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
ஒசூர் பகுதியில் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞரை ஆனந்தன் என்பவர் ஏராளமான மக்கள் கண்முன்னே கத்தியால் கொடூரமாக வெட்டியதில் தற்போது மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதை கண்டித்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேப்போல் நெல்லை நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அனைத்து மாவட்ட அமர்வு நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நீதி கேட்டும், பாதுகாப்பு கேட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இதுகுறித்த நடவடிக்கைகள் எடுக்க அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..