”டங்ஸ்டன் சுரங்கம்..” சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்…!!
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் எனும் கனிம வளத்தை சுரங்க நடவடிக்கையின் மூலம் எடுப்பதற்கு கடந்த நவம்பர்-7 அன்று வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் ஏலம் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரக்கூடாது என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொள்கை முடிவை அறிவித்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி டங்ஸ்டன் கனிமத் திட்டத்திற்கு நவம்பர் -23 ஆம் தேதியன்று பல்வேறு கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..