மாநில அரசின் இசைவு பெறாமல் மத்திய அரசு வெளியிடக் கூடாது….!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி..!!
மாநில அரசின் இசைவு பெறாமல் சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக ஒன்றிய சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தான் முதலமைச்சராக இருக்கும்வரை, தன்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று கூறியிருந்ததை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதையும், மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது என்றும், மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுக துணைபோக கூடாது என்று தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..