மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கூட்டம் இல்லாத நிலையில், 25 லட்சம் பேர் பங்கேற்றதாகப் பொய்யான தகவல்களைக் கூறியதாக அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. விமர்சனம் செய்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் :
மதுரையில் நடைபெற்றது எழுச்சி மாநாடு அல்ல; அது எடப்பாடி பழனிசாமிக்கு வீழ்ச்சி மாநாடு. இந்த மாநாட்டுக்காக அவர் இவ்வளவு செலவு செய்திருந்தாலும், அதிகபட்சமாக 2.50 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். 25 லட்சம் பேர் பங்கேற்றதாகக் கூறுவது பொய்யான தகவல். அவருக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் கொடுத்திருப்பது புரட்சி என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்.
துரோகத் தமிழர் என்ற பட்டம் வேண்டுமானால் கொடுத்திருக்கலாம்.
பாஜகவுடன் எனக்கு என்றைக்குமே உறவு கிடையாது. அங்கு எனக்கு நண்பர்கள் மட்டுமே உள்ளனர். தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.
பாஜகவுடன் எனக்கு என்றைக்குமே உறவு கிடையாது. அங்கு எனக்கு நண்பர்கள் மட்டுமே உள்ளனர். தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.